Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (19:32 IST)
இலக்கியத்திற்கான 2008 நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன்-மேரி குஸ்தாவே-லி க்ளேஸியோ-வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நோபல் பரிசு அறிவிப்பு குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரை இல்லாத நடைகளில் கதைகள், கவிதைகள் எழுதியது, தற்போதுள்ள உலக நாகரிகத்தை மையமாகக் கொண்டு அதனை விட மேம்பட்ட மனிதத் தன்மையையும், அதற்கு கீழான மனிதத் தன்மையையும் பதிவு செய்தது ஆகிய பணிகளுக்காக இந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஜீன்-மேரி குஸ்தாவே-லி க்ளேஸியோ-வுக்கு ( Jean-Marie Gustave Le Clézi o) அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

webdunia photoFILE
நெய்ஸ் நகரில் கடந்த 1940 ஏப்ரல் 13ஆம் தேதி பிறந்தவர் ஜீன்-மேரி. இவரது பெற்றோர் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள். உலகப் போரின் காரணமாக 8 வயதாக இருந்த போது குடும்பத்துடன் நைஜீரியாவுக்கு புலம் பெயர்ந்த ஜீன்-மேரி, அப்போதிருந்தே இலக்கியப் பணிகளை துவக்கினார். உன்-லாங் வாயேஜ் ( Un long voyag e), ஓராடி நோய்ர் ( Oradi noi r) ஆகியவையே அவரின் முதல் இலக்கியப் பணிகளாகும்.

இளம் பருவத்தில் இருந்தே பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்த ஜீன்-மேரி, கடந்த 1950இல் நெய்ஸ் திரும்பினார். பின்னர் 1958-59இல் பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்ற அவர், 1963இல் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1964இல் அய்க்ஸென் மாகாணப் பல்கலையில் ( University of Aix-en-Provenc e) முதுகலை படிப்பை பூர்த்தி செய்த ஜீன்-மேரி, 1983இல் பெரிபிக்னன் பல்கலையில் ( University of Perpigna n) மெக்ஸிகோ நாட்டின் முந்தைய வரலாற்று ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.

பாங்காக், மெக்ஸிகோ நகரம், போஸ்டன், ஆஸ்டின் மற்றும் அல்புக்யூர்க்யூ ஆகிய நகரங்களில் உள்ள பல்கலைகளில் பேராசிரியராகவும் ஜீன்-மேரி பணியாற்றியுள்ளார்.

கடந் த 1963 இல ் எழுதி ய த ி இன்ட்ராகேஷன ் (The Interrogatio n) என் ற நாவலின ் மூலமா க உலகின ் கவனத்த ை ஈர்த் த ஜீன ்- மேர ி, 1965 இல் ப்வீவர் ( Feve r) என்ற சிறுகதைகளின் தொகுப்பை பூர்த்தி செய்தார். பின்னர் 1967இல் தி ப்ளட் ( The Floo d), 1967ல் டெர்ரா அமாதா ( Terra Amat a), 1969இல் தி புக் ஆஃப் ப்ளைட்ஸ் ( The Book of Flight s), 1970இல ் வார் ( Wa r), 1973இல் தி ஜெயன்ட்ஸ் ( The Giant s) ஆகிய படைப்புகளை உலகிற்கு அர்ப்பணித்தார்.
அவர் 1980இல் எழுதிய டிசெர்ட் ( Déser t) என்ற நாவல் அவருக்கு பிரெஞ்சு அகடமி விருதைப் பெற்றுத் தந்தது.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments