Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமாபாத்: பயங்கரவாத எதிர்ப்பு படை வளாகம் மீது தாக்குதல்!

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (17:13 IST)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் பயங்கரவாத எதிர்ப்பு படையினரின் அலுவலக கட்டிட வளாகத்தின் மீது இன்று கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

காவல்துறையினரின் குடியிருப்புகள் மற்றும் பயிற்சிக் காவலர்கள் தங்கியுள்ள இந்த கட்டிடத்திற்கு அளிக்கப்பட்ட பலத்த பாதுகாப்பையும் மீறி, தற்கொலைப்படை தீவிரவாதிகள் காரில் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டாலும், தாக்குதலுக்கு உள்ளான இடத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் பேசிய இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் அஸ்கர் ரஸா கர்தேஸி, 4 காவலர்கள் மட்டுமே காயமடைந்துள்ளனர் என்றார்.

சக்தி வாய்ந்த இந்த குண்டுவெடிப்பின் காரணமாக எழுந்த சத்தம் பல கி.மீ தூரத்திற்கு கேட்டது என்றும், கட்டிட வளாகத்தின் முகப்புப் பகுதி முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments