Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானிய, 2 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு!

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (12:24 IST)
ஜெல்லி பிஃஷ் ( jellyfis h) எனப்படும் மீனில் இருந்து பல வண்ண பசுமைப் புரதத்தை ( green fluorescent protei n- GF P) கண்டறிந்ததற்காக 2008ஆம் ஆண்டுக்கான வேதியியல் பிரிவு நோபல் பரிசு ஜப்பானிய விஞ்ஞானி உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிவியலுக்கான ராயல் ஸ்வீடன் அகடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானைச் சேர்ந்த ஒசாமு ஷிமோமுரா (தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்), அமெரிக்காவின் மார்டின் சல்ஃபி மற்றும் ரோஜர் செய்ன் ஆகியோருக்கு வேதியியலுகான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

உலகில் உள்ள ஜீவராசிகளில் பல்லாயிரக்கணக்கான வகை புரதங்கள் அடங்கியுள்ளன. இவைதான் உடலில் நிகழும் வேதியியல் மாற்றங்களை கட்டுப்படுத்துபவை. இவற்றில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் உடல்நலக் கோளாறு, வியாதிகள் ஏற்படும். எனவே பல்வேறு வகை புரதங்களின் செயல்பாடுகளைக் கண்டறிய வேண்டியது உயிரி அறிவியலின் முக்கிய பணியாகும்.

பல வண்ண பசுமைப் புரதம்: இகோரியா விக்டோரியா ( Aequorea Victori a) என்ற வகை ஜெல்லி பிஃஷ் மீனில் இருந்து கடந்த 1962இல் பல வண்ண பசுமைப் புரதம் கண்டறியப்பட்டது. அன்று முதல் உயிரி அறிவியில் ( bioscienc e) துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் GF P குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. GF P-யின் உதவியை கொண்டு மூளை நரம்பின் வளர்ச்சி மற்றும் புற்றுநோய் செல்களில் பரவும் தன்மையை ஆய்வாளர்கள் அறிந்து கொண்டனர்.

GF P கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகளின் பங்கு: வட அமெரிக்காவின்
webdunia photoFILE
மேற்கு கடலோரப் பகுதியில் காணப்படும் இகோரியா விக்டோரியா என்ற ஜெல்லி பிஃஷ் மீனின் உடலில் இருந்து GF P புரதத்தை விஞ்ஞானி ஒசாமு ஷிமோமுரா பிரித்தெடுத்தார். இந்த வகை புரதங்கள் மீது ஊதாக் கதிர்களை செலுத்தினால் அவை பச்சை நிறத்தை உமிழும் என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

இதேபோல் உயிரி அறிவியிலின் பல்வேறு ஆய்வுகளுக்கு, மருத்துவ சோதனைகளுக்கும் GF P பயன்படும் என்பதை மார்டின் சல்ஃப ி
webdunia photoFILE
உலகிற்கு உணர்த்தினார். இதற்காக ஒளி ஊடுருவும் Caenorhabditis elegan s ரக மண்புழுவின் உடலில் உள்ள 6 தனி செல்களுக்கு வண்ணமூட்டிக் காட்டினார்.

மற்றொரு விஞ்ஞானியான ரோஜர் செய்ன் GF P-யின் பொதுவான குணநலன்களைக் கண்டறிந்தார். அதுமட்டுமின்றி அதன் பச்சை நிறத்தை பல்வேறு வக ை
webdunia photoFILE
நிறங்களாக மாற்றும் முயற்சியிலும் அவர் வெற்றி கண்டார். இதன் மூலம் பல்வேறு உயிரி அறிவியல் ஆய்வுகள் பயனடைந்தது குறிப்பிடத்தக்கது.

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments