Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒப்பந்த சட்டம்: புஷ் நாளை கையெழுத்து!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:07 IST)
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வகைசெய்யும் 123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை சட்டமாக்கிடும் வரைவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நாளை கையெழுத்திட உள்ளார்.

இதுதொடர்பாக அதிபர் புஷ்ஷுடன் நேற்று சான் ஆன்டோனியோ, டெக்சாஸ் ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்ட வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்காட் ஸ்டேன்செல் செய்தியாளர்களிடம் பேசிய போது, நாளை (புதன்) மதியம் 2.30 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.20) அதிபர் புஷ் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான சட்டத்தில் கையெழுத்திடுவார் என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு அமெரிக்க அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மட்டுமின்றி அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடவடிக்கை மேற்கொண்ட இந்திய-அமெரிக்க சமுதாயத்தினர், முன்னணி தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அணு எரிபொருள் வழங்கல் உறுதிமொழி, யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான தொழில்நுட்பம் வழங்குதல் மற்றும் பயன்படுத்திய அணு எரிபொருளை மறுசுழற்சிக்கு உட்படுத்துதல் ஆகிய விடயங்களில் ஹென்றி ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்துமா என்பது குறித்தும் புஷ் அப்போது விளக்கமளிப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், வரும் 10ஆம் தேதி 123 உடன்பாட்டில் இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைசும் கையெழுத்திடுவார்கள் என்று தகவல்கள் தெரிவித்தாலும், அதுகுறித்து அறிவிப்பு வெளியிட புஷ் நிர்வாகம் மறுத்துள்ளது.

அமெரிக்க அரசு செய்தியாளர் ராபர்ட் வுட்ஸ் இதுகுறித்து பேசுகையில், அணு சக்தி ஒ‌‌த்துழை‌ப்பு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் எப்போது கையெழுத்திடும் என்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments