Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரப்ஜித் சிங்கை சந்திக்கிறார் பாக். மனித உரிமை அமைச்சர்!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (18:28 IST)
பாகிஸ்தான் அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கை, அந்நாட்டு சட்டம் மற்றும் மனித உரிமை அமைச்சர் பரூக் நயேக் வரும் திங்கட்கிழமை சந்தித்திப் பேச உள்ளார்.

PTI PhotoFILE
கருணை வேண்டி சரப்ஜித் சமர்ப்பித்துள்ள மனுவின் மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் பரூக், சரப்ஜித்திடம் அப்போது விவாதிப்பார் எனத் தெரிகிறது.

கடந்த 1990ஆம் ஆண்டு லாகூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி சரப்ஜித் சிங்கை கைது செய்த பாகிஸ்தான் அரசு, அவர் மீது உளவு பார்த்தது, வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட குற்றம்சாட்டுகளை சுமத்தியது. இதையடுத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

அவரைக் காப்பாற்ற அவரது குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டதால், சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் தள்ளி வைத்தது.

இதற்கிடையில், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட மான்ஜித் சிங் என்பவருக்கு பதிலாக சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் அரசு கைது செய்து விட்டதாக இந்தியாவும், சரப்ஜித் சிங்கின் உறவினர்களும் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை குறைக்க கோரிய கருணை மனுவை அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப் நிராகரித்தாலும், இந்திய அரசின் நடவடிக்கையால் அந்நாட்டில் பதவியேற்ற புதிய அரசு சரப்ஜித் தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவைத்துள்ள நிலையில், வரும் திங்களன்று அமைச்சர் பரூக் அவரை சந்திக்கிறார்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments