Webdunia - Bharat's app for daily news and videos

Install App

700 பில்லியன் டாலர் நிதி கோரிக்கை: அமெரிக்க காங்கிரஸ் நிராகரிப்பு!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (12:59 IST)
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவைத் தடுக்க அந்நாட்டு தனியார் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்களுக்கு 700 பில்லியன் டாலர் கடனுதவி அளிப்பது தொடர்பாக புஷ் அரசு தாக்கல் செய்த கடனுதவி திட்டதை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.

அமெரிக்க பொருளாதாரத்தை மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்க அதிபர் புஷ் உருவாக்கியுள்ள திட்டம் என்று கூறப்பட்ட இந்த நிதிக் கோரிக்கை தீர்மானம் அந்நாட்டு காங்கிரஸால் நிராகரிப்பட்டிருப்பது அமெரிக்க பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ரூபாயில் 3 லட்சம் கோடி அளவிற்கான இந்தக் கடனுதவித் திட்டத்திற்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் (காங்கிரஸ்) சபையில் நடந்த வாக்கெடுப்பில், ஆதரவாக 228 வாக்குகளும், எதிராக 205 வாக்குகளும் பதிவாகியது.

எந்த ஒரு தீ்ர்மானம் அல்லது சட்ட முன்வரைவு அல்லது திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், புஷ் தாக்கல் செய்த கடனுதவித் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடனுதவி திட்டம் மீதான வாக்கெடுப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க காங்கிரஸ் அவைத் தலைவர் நான்ஸி பெலோஸி, வரி செலுத்தும் மக்களைக் பாதுகாக்கவே நாம் இங்கு இருக்கிறோம், எனவே சந்தையை நிலைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments