Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒப்பந்த‌ம்: செனட் சபை‌யி‌ல் நாளை வா‌க்கெடு‌ப்பு!

Webdunia
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (11:25 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் நாளை பெறப்படும் என புஷ் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகை உயரதிகாரி ஒருவர் இந்திய-அமெரிக்க சமுதாயத்தின் மூத்த தலைவர்களிடம் நேற்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 28ஆம் தேதி அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் பதிவானது.

இதையடுத்து நாளை அமெரிக்க செனட் சபையில் அணு சக்தி ஒப்பந்தம் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்படும் என வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அனுமதியைப் பெற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்றாலும், செனட் சபையில் சாதாரண பெரும்பான்மையே போதும் என்பதால் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு செனட் அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருக்காது என அதிபர் புஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments