Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பிரான்ஸ் அணு சக்தி ஒப்பந்தம் நாளை கையெழுத்து!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (16:12 IST)
அமெரிக்காவிடம் செய்துகொண்டது போல பிரான்ஸ் உடனும் ஒரு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியா கையெழுத்திட உள்ளது.

இந்தாண்டு ஜனவரியில் அதிபர் சர்கோஸி இந்தியா வந்திருந்த போது இரு நாடுகளிடையே அணு சக்தி தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வ பணிகளுக்காக பயன்படுத்த வழிவகுக்கும் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வரைவு இறுதி செய்யப்பட்டது. எனினும் பன்னாட்டு அணு சக்தி முகமையின் அனுமதி அப்போது இந்தியாவுக்கு இல்லாததால் அதனை கையெழுத்திட முடியவில்லை.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை நாளை பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கும் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் பிரதமருடன் பிரான்ஸ் சென்றுள்ள இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திய அரசுடன் பிரான்சுக்கு நட்புறவுடன் இணைந்த நீண்ட காலத் தொடர்பால், இரு தரப்பிலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இரு நாடுகளிடையிலான புதிய அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அமையும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் அதிபர் சர்கோஸி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments