Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடப்பு ஆண்டுக்குள் 4 பில்லியன் செல்பே‌சி வாடிக்கையாளர்கள்: ஐ.நா. தகவல்!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (17:43 IST)
இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சியால் உலகளவில் செல்பே‌சி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்தாண்டு இறுதிக்குள் 4 பில்லியனைத் தாண்டும் என ஐ.நா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மட்டும் செல்பே‌சி இணைப்பு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை இந்தாண்டுக்குள் 1.3 பில்லியன் இலக்கை தாண்டும் என்றும் ஐ.நா. சர்வதேச தொலைத்தொடர்பு ச‌ங்க‌ம் ( United Nations International Telecommunications Unio n) கூறியுள்ளது.

நியூயார்க்கில் நடந்த உயரதிகாரிகள் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பொதுச் செயலாளர், புத்தாயிரத்து ஆண்டு மேம்பாட்டு இலக்குகளின் படி வரும் 2015ஆம் ஆண்டில் எட்ட வேண்டிய இலக்கை அடையும் திறன் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்திற்கு உள்ளது என்றார்.

கடந்த 2000வது ஆண்டு வரை 12 ‌விழு‌க்காடாக இருந்த செல்பே‌சி வாடிக்கையாளர்களின் வளர்ச்சி, அதன் பின்னர் தற்போது வரை 25 ‌விழு‌க்காடாக உயர்ந்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments