Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திபெத்தில் கடும் நிலநடுக்கம்!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (18:29 IST)
திபெத்-நேபாள எல்லைப்பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 6 ஆக பதிவாகியுள்ளதாக அந்த மண்டல நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

திபெத் தன்னாட்சிப் பகுதியின் ( Xigaze prefectur e) சோங்பா மாகாணத்தின் வடக்கே 122 கி.மீ தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 18 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் வசிப்பதாக நிலநடுக்க கண்காணிப்பு மையத்தின் தலைவர் ஜு-குவான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி சோங்பா மாகாணத்தில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஏற்பட்ட பின்னதிர்வே இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் என்றும் ஜு-குவான் கூறியுள்ளார்.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 6.2 மையத்தில் மையம் கொண்டதாகவும், ரிக்டர் அளவில் இது 5.7 ஆக பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments