Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அணு சக்தி ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (12:42 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சப ையில் இன்று நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ள நிலையில், அதற்கு சில மணி நேரம் முன்பாக அணு சக்தி ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதால், புஷ் உடனான சந்திப்பிற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் அணு சக்தி ஒப்பந்தம் இடம்பெறும் என்றாலும், அது முதல் விவாதமாக எடுத்துக் கொள்ளப்படுமா என்பது சந்தேகமே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நேற்று நடந்த அமெரிக்க செனட் சபை கூட்டத்தில ், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அயலுறவு விவகாரங்களுக்கான செனட் குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பிலும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற இரு அவைகளிலும் போதுமான ஆதரவு உள்ளதாக புஷ் அரசு நேற்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments