Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"கச்சா எண்ணெய்ப் போர்"- நைஜீரிய தீவிரவாதிகள் நிறுத்தம்!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (14:18 IST)
நைஜீரியாவின் முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி மையமான நைஜீர் டெல்டா பகுதியில் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வரும் நைஜீர் டெல்டா பாதுகாப்பு எழுச்சி இயக்கம் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள பழங்குடி இனத்தலைவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த தீவிரவாத அமைப்பு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

அந்நாட்டு ராணுவம் இந்த தீவிரவாத அமைப்பின் ஒரு முகாம் மீது கடந்த வாரத்தில் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்த ஒரு வார கால இடையறா கச்சா எண்ணெய் போரை நடத்தி வந்தது இந்த தீவிரவாத அமைப்பு.

நைஜீர் டெல்டாவில் உள்ள எண்ணெய் வளத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சண்டையில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. ஆனால், எண்ணெய் திருட்டு மூலம் குற்ற உலகத்துடன் தொடர்பு கொண்டு கள்ளச்சந்தை எண்ணெய் விற்பனையில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டும் உள்ளது.

இவர்களின் தாக்குதலால் நாளடைவில் நைஜீர் டெல்டாவின் கச்சா உற்பத்தி 20 விழுக்காடு குறைந்துள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments