Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுத சோதனை நடத்தினால் எதிர் நடவடிக்கை எடுக்க உரிமையுண்டு: அமெரிக்கா!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (12:46 IST)
அணு ஆயுத சோதனை நடத்த இந்தியாவிற்கு அதன் இறையாண்மை ரீதியான உரிமை உள்ளதுபோல, அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்கும் உரிமை அமெரிக்காவிற்கு உள்ளது என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவு குழுவிற்கு அந்நாட்டு அயலுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அயலுறவு குழு உறுப்பினர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளித்து அந்நாட்டு அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் வில்லியம் பர்ன்ஸ், “இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது, இந்த கேள்விக்கு எங்களுடைய சுருக்கமான பதில ்: அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை தங்களுடைய இறையாண்மைத் தொடர்பானது என்று இந்தியா கூறுகிறது, அதேபோல, அப்படிப்பட்ட சோதனை நடத்தப்பட்டால் அதற்குரிய பதில் நடவடிக்கை எடுக்கும் இறையாண்மை ரீதியான உரிமை நமக்கும் உண்டு என்பத ே” என்று கூறியுள்ளார்.

“2005ஆம் ஆண்டு முதல் கடைபிடித்துவரும் தன்னிச்சையான சுய சோதனைத் தடையை தொடர்ந்து கடைபிடிப்போம் என்று 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் உறுதிமொழி அளித்துள்ளது. இதை மீறி இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் அதற்கு பதிலடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்டும் என்றும். அது ஹென்றி ஹைட் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் கூறியுள்ளார். எனவே தனது உறுதிமொழியை மீறினாலோ, பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறினாலோ இந்தியாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் முடிந்துவிடும ்” என்று அந்த விளக்கத்தில் வில்லியம் பர்ன்ஸ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

$100 பில்லியன் மதிப்பு கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து அம்பானி, அதானி வெளியேற்றம்: என்ன காரணம்

சென்னைக்கு இது கடைசி மழை இல்லை.. இன்னும் மழை இருக்குது: தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னைக்கு வந்த அதானி யாரை சந்தித்தார்? அறப்போர் இயக்கம் கேள்வி..!

Show comments