Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான்: மசூதி தாக்குதலில் 12 பேர் பலி!

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2008 (13:09 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள மசூதியில் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிக‌ள் குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் திர் பகுதியில் அமைந்துள்ள இந்த மசூதியில் நேற்றிரவு நுழைந்த தீவிரவாதி இந்த சதிச்செயலை நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 40க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.

நிகழ்விடம் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை என்றும், காயமடைந்தவர்கள் டிமெர்கிரிஹ் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு தனியார் வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த சிலர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments