Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தாக்கல்!

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2008 (13:07 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அனுமதி கோரி அந்த ஒப்பந்தத்தின் நகலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் புஷ் இன்று தாக்கல் செய்துள்ளார்.

அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி) சார்பில் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு 5 நாட்களுக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக அந்த ஒப்பந்தம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை சார்பில் நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆக்கப்பூர்வ பணிகளுக்காக அணு சக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வகை செய்யும் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 40 ஆண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என்றும், இந்தக் காலக்கெடு முடிவடைவதற்கு 6 மாதத்திற்கு முன் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக இரு நாடுகளும் அறிவிப்பு வெளியிடாவிட்டால், அடுத்த 10 ஆண்டுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என்றும் புஷ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

எனினும் இடைப்பட்ட காலத்தில் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இரு நாடுகளுக்குமே தார்மீக உரிமை உள்ளதாகவும், ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஒரு ஆண்டு அவகாசம் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments