Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்ஜியாவில் இருந்து 30 நாளில் ரஷ்ய ராணுவம் வெளியேறும்!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:48 IST)
ஜார்ஜியாவில ் உள்ள ரஷ்ய படைகளை இன்னும் ஒரு மாதத்தில் திரும்பப் பெற ரஷ்ய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிபரை சந்தித்த பின், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி தெரிவித்தார்.

ஜார்ஜியாவில் உள்ள படைகளை ரஷ்யா முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவதற்காக மாஸ்கோ சென்ற பிரான்ஸ் அதிபர் சர்கோஸி, ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உட‌ன் அதுகுறித்து பே‌ச்சு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாகப் பேட்டியளிக்கையில், ஒரு மாத காலத்திற்குள் ஜார்ஜியாவில் உள்ள படைகளை (2 பகுதிகளை தவிர்த்து) திரும்பப் பெற ரஷ்யா ஒப்புக் கொண்டதாக சர்கோஸி கூறினார்.

அப்போது பேசிய மெத்வதேவ், ஜார்ஜியாவில் இருந்து பிரிந்த தெற்கு ஒசீடியா மற்றும் அப்காஷியா பகுதிகளை தனி நாடாக அறிவித்தது பற்றி சர்வதேச அளவில் எதிர்காலத்தில் பேச்சு நடத்தப்படும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments