Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எகிப்து: பாறை சரிந்த விபத்தில் பலி 38 ஆக உயர்வு!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (17:03 IST)
எகிப்து தலைநகர் கெய்ரோவின் அருகே உள்ள புறநகர்ப் பகுதியான ஷான்டியில், ராட்சத பாறைகள் உருண்டு குடியிருப்புப் பகுதியில் விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் 38 பேர் பலியானதாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷான்டியின் முகுட்டம் மலைச்சரிவின் அடிவாரத்தில் அமைந்துள்ள பெக்கெய்ட் கிராமத்து வீடுகள் மீது, கடந்த சனிக்கிழமையன்று எட்டு ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தன. பாறைகள் ஒவ்வொன்றும் சுமார் 70 டன் எடையுள்ளவை என்பதால், அக்கிராமத்தில் உள்ள 50 வீடுகள் மண்ணில் புதைந்தன.

இதில் முதற்கட்டமாக 22 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் சரிந்து விழுந்த பாறைகளுக்கு அடியில் சிலர் சிக்கியிருந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments