Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.பி.டி-யில் கையெழுத்திடும் வரை இந்தியாவுக்கு யுரேனியம் கிடையாது: ஆஸி!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (12:38 IST)
அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (என்.பி.டி- NP T) கையெழுத்திடும் வரை இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க முடியாது என ஆஸ்ட்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் வணிக அமைச்சர் சிமன் கிரியன் ஆஸ்ட்ரேலிய நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், என்.பி.டி-யில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே ஆஸ்ட்ரேலியா யுரேனியம் வழங்கும் என்பதே ஆளும் தொழிலாளர் கட்சியின் கொள்கை. இத‌ன் காரணமாக என்.பி.டி-யில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அந்நாட்டின் எதிர்க்கட்சி (பெடரல் கட்சி) ஆஸ்ட்ரேலிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், அடுத்த வாரம் இந்தியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செல்லும் அயலுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், இருநாடுகளுக்கு இடையே புதிய யுரேனிய வணிகக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெடரல் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ராப் கூறுகையில், பசுமைக்குடில் வாயுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அணு சக்தி தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் தயாரிக்க இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு ஆஸ்ட்ரேலிய அரசு துணைபுரிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments