Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இ‌ன்று அணு சக்தி ஒப்பந்தம் தாக்கல்!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (12:19 IST)
வியன்னாவில் நடைபெற்ற என்.எஸ்.ஜி கூட்டத்தில் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, இன்று கூடும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அணு சக்தி ஒப்பந்தத்தை அதிபர் புஷ் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையின் கடைசி கட்டமாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கருதப்படும் நிலையில், இந்தியாவுக்கும், புஷ் அரசுக்கும் இன்று கூடும் நாடாளுமன்றம் கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என இந்திய-அமெரிக்க மன்றத்தின் தலைவர் அசோக் மகோ கருத்து தெரிவித்துள்ளார்.

காண்டலீஸா ரைஸ் நம்பிக்கை: அதிபர் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடையை குறுகிய காலமே இருப்பதால் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கான அனைத்து பேச்சுவார்த்தையையும் துவக்கி விட்டதாக அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில ், சில வாரங்களுக்கு முன்ப ே பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள கமிட்டிகளின் தலைவர்களுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அனுமதி பெறுவதற்கான பேச்சுக‌ளை தொடங்கி விட்டேன்.

அணு சக்தி ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்குமாறு மீண்டும் அவர்களுடன் விவாதிக்க உள்ளதாகவும், இப்பேச்சு திங்கள் (இன்று) அல்லது செவ்வாய்க்கிழமை (நாளை) தொடங்கும் என்றும் குறிப்பிட்ட காண்டலீசா, இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு குறுகிய கால அவகாசமே இருப்பதை அமெரிக்கா அறிந்துள்ளதாகவும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments