Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக். அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (17:18 IST)
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்திருந்தவர்கள், தங்களது மனுவை திரும்பப் பெற இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜர்தாரியின் சகோதரியான பர்யல் தல்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த மனுவை பி.பி.பி. கோரிக்கையை ஏற்று திரும்பப் பெற்றார். இதன் பின்னர் பேசிய அவர், ஆசிப் அலி ஜர்தாரி வெற்றி பெறுவதற்கு தேவையான பெரும்பான்மை தங்கள் கட்சியிடம் உள்ளதாகவும், கட்சியின் வேண்டுகோளை ஏற்றே அதிபர் போட்டியில் இருந்து விலகியதாகவும் கூறினார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி) சார்பில் அக்கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி சயீத்-சமன் சித்திக் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) சார்பில் முஷாஹித் ஹுசைன் சையத் ஆகியோர் தங்களது மனுக்களை இன்று திரும்பப் பெறாததால் அவர்கள் மூவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

அதிபர் பதவியில் முஷாரஃப் இருந்த காலத்தில், அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கையை பி.பி.பி. ஏற்கத் தவறியதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி ஆளும் கூட்டணியில் இருந்து விலகியதுடன், அதிபர் தேர்தலில் ஜர்தாரியை எதிர்த்து வேட்பாளரை முன்னிறுத்தியது.

இதையடுத்து மீண்டும் கூட்டணியில் இணைய ஜர்தாரி விடுத்த வேண்டுகோளை ஷெரீஃப் ஏற்க மறுத்ததுடன், அதிபர் தேர்தலில் தனது கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரையும் திரும்பப் பெற மறுத்துவிட்டதால், மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments