Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியது ரஷ்யா!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (13:08 IST)
கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையை ரஷ்ய ா வெ‌ற்‌றிகரமாக நடத்தியுள்ளது. இது ஏவுகணை-தடுப்பு தொழில்நுட்பத்தை முறியடித்து முக்கிய இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டோபோல்- ஆர்.எஸ்-12 எம் ( Topo l- RS-12 M) என்ற இந்த ஏவுகணை சோதனையை நே‌ற்று நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் விளாடிமிர் புதின், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ நாடுகளின் நிலை மற்றும் செயல்பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறினார்.

இந்த ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், உலகளவில் பாதுகாப்பு மற்றும் அமைதியை தொடர்ந்து நிலைநிறுத்தவே ரஷ்யா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியதாகவும் புதின் அப்போது குறிப்பிட்டார்.

சுமார் 6,000 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்கும் வல்லமையை ரஷ்யாவின் நவீன ஏவுகணை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments