Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (13:18 IST)
இந்தோனேஷியாவின் மத்திய பகுதியில் இன்று காலை கடு‌ம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.6 ஆக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தி ய நேரப்படி இன்று காலை 8.37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அந்நாட்டு கடல்பகுதியான சுன்டா ஜலசந்திப் பகுதியில் 12 மைல் ஆழத்தில் மையம் கொண்டதாக அந்நாட்டு அரசு புவியியலாளர் பவுஸி தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும், இதையடுத்து சில நிமிடங்களில் இந்தோனேஷிய வானிலை ஆய்வு மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடல் பகுதியில் உயரமான அலைகள் எழவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அமெரிக்க புவியியல் மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடித் தகவல் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments