Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணியில் இருந்து நவாஸ் கட்சி விலகல்: பாக். அரசியலில் திருப்பம்!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (19:01 IST)
பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்து, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி விலகியுள்ளது.

முஷாரஃப் அதிபர் பதவியில் இருந்து போது நீக்கிய நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்த பிரச்சனையில் இரு கட்சிகளிடமும் ஏற்பட்ட உடன்பாட்டின் படி குறித்த காலக்கெடுவுக்குள் நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்தாததால், நவாஸ் ஷெரீப் கட்சித் தலைமை இந்த முடிவை இன்று மாலை எடுத்ததாக அந்நாட்டில் ஒளிபரப்பாகும் ‘டான ் ’ சேனல் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீம் (என்) சார்பில் தலைமை நீதிபதி சயீத்-உஸ்-ஜமான் சித்திக் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சற்று முன் நடந்து முடிந்த நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் (பி.எம்.எல்-என்) மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சித்திக்-உல்-பரூக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணியில் உள்ள ஒரு கட்சி (பி.பி.பி) பல முடிவுகளை தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது, அந்தக் கூட்டணியில் இடம் பெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறினார்.

இதற்கிடையில், இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு அதிபர் வேட்பாளர் பிரச்சனையும் காரணம் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரான ஆசிப் அலி ஜர்தாரியை அதிபர் வேட்பாளாராக அறிவிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம், பிரதமரை நீக்கும் அதிகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களை அதிபருக்கான அதிகாரத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற பி.எம்.எல் (என்) கோரிக்கையை பி.பி.பி. ஏற்காததும் இரு கட்சிகள் இடையே பிளவை அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments