Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.எஸ்.ஜி நாடுகள் கூட்டம் இன்று துவக்கம்!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (12:57 IST)
அமெரிக்கா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா முன் வைத்துள்ள வரைவின் மீது அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு ( NSG) இன்று முடிவெடுக்கிறது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமையின் ( IAEA) ஒப்புதலைப் பெற்றுள்ள இந்திய ா, தனக்குத் தேவையான அணு சக்தி எரிபொருள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகளை வாங்கவும ், தான் தயாரிக்கும் அணு சக்தி தொழில்நுட்ப கருவிகளை உலக நாடுகளிடம் விற்கவும் அனுமதி கோரும் வரைவை என்.எஸ்.ஜி. ( Nuclear Suppliers Group - NSG) என்றழைக்கப்படும் அணு சக்தி தொழில்நுட்ப வணிக்க் குழுவிடம் அளித்துள்ளது.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள 45 நாடுகளுடன் அணு சக்தி தொழில்நுட்ப கருவிகளை வணிகம் செய்ய வேண்டுமெனில் எந்த ஒரு நாடும் (5 வல்லரசுகள் தவிர) அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியா அதில் கையெழுத்திட மறுத்து வரும் நாடு என்பது மட்டுமின்ற ி, தன்னை ஒரு அணு ஆயுத நாடாக அங்கீகரித்திட வேண்டும் என்றும் கோரி வருகிறது.

இந்நிலையில், என்.எஸ்.ஜி.யில் இடம்பெற்றுள்ள 38 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படும் எனக் கருதப்பட்டாலும், 45 நாடுகளின் அனுமதியையும் பெற வேண்டும் என்பதால், இன்று துவங்கி 2 நாள் நடைபெறும் என்.எஸ்.ஜி. கூட்டம் இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த 2 நாள் கூட்டத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து 45 நாடுகள் இடையே ஒருவேளை ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், வரும் செப்டம்பர் 2ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள இந்திய ா, என்.எஸ்.ஜி.யின் மேற்கண்ட நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரியுள்ளது.

ஆனால் அவ்வாறு விலக்கு அளிக்க என்.எஸ்.ஜி. முன்வரும்போத ு, இந்தியா என்.பி.டி.யில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கக் கூடாது என்றும் கூறி வருகிறது. இதனை ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments