Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃப் பதவிநீக்கம்: ராணுவ தளபதியிடம் முறையிட பி.பி.பி. கூட்டணி முடிவு!

Webdunia
PTI PhotoFILE
அதிபர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக முஷாரஃப்பிடம் பேச்சு நடத்தக் கோரி ராணுவத் தளபதி பர்வேஸ் கயானியிடம், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி) தலைமையிலான கூட்டணி வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.பி.பி. கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அதிபர் முஷாரஃப் தனது பதவியை இன்னும் 72 மணி நேரத்தில் ராஜினாமா செய்யாவிட்டால், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மேலும் பலவீனமடையும் என பி.பி.பி. கருதுவதாகவும், ஆனால் அதற்குள் முஷாரஃப் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

எனினும், அதிபர் பதவியில் இருந்து விலகாமல் முஷாரஃப் தொடர்ந்து நீடித்தால், ராணுவத் தளபதியிடம் கூறி அவரை பதவி விலகச் சொல்வதைத் தவிர பாகிஸ்தான் அரசுக்கு வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார்.

பதவியில் இருந்து விலகினாலும் அதிபருக்கு இணையான மரியாதையுடன் பாகிஸ்தானில் இருக்கவே முஷாரஃப் விரும்புவதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அரசியல் கட்சிகள் உடன்பட்டால் மட்டுமே தனது பதவியில் இருந்து அவர் விலகுவார் எனக் கூறப்படுகிறது.

ஆனால், அரசியல் கட்சிகள் அனைவரும் அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் விலக வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், தற்போதைய சூழ்நிலையில் அவர் வேறு ஏதாவது நாட்டிற்கு சென்று சிறிது காலம் தங்குவதே நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments