Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃப் கவுரவமாக விலக ராணுவம் ஆலோசனை!

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2008 (16:00 IST)
PTI PhotoFILE
பாகிஸ்தானில் ஆளும் கூட்டணி கட்சிகளால் பதவி நீக்கம் செய்யப்படும் முன் அதிபர் முஷாரஃப் தாமாக முன்வந்து பதவி விலகுவது நல்லது என பாகிஸ்தான் ராணுவ‌ம் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ‘தி டெய்லி டெலிகிராஃப ் ’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், அதிபர் பதவியில் இருந்து விலக இதுவே சரியான தருணம் என அதிபர் முஷாரஃப்பிடம் ராணுவத் தளபதி கிலானி வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.

பதவி நீக்கத் தீர்மானத்திற்கு எதிராக போராடுவது பயனளிக்காது என முஷாரஃப்பிடம் இன்னும் ஓரிரு நாட்களில் ராணுவத் தலைமை வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவம் உள்நாட்டு அரசியல் முடிவுகளில் தலையிடாது என்று இங்கிலாந்து நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ள முன்னாள் ராணுவ அதிகாரி, ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிபர் முஷாரஃப் தாமாக முன்வந்து பதவியில் இருந்து விலகுவதன் மூலம் ராணுவத்தின் கவுரவத்தையும் காப்பாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments