Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃப் நீக்கம் பாக். உள்நாட்டு விவகாரம்: அமெரிக்கா!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (12:43 IST)
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்பை பதவியில் இருந்து நீக்குவது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம், எனினும் பதவி நீக்க நடவடிக்கை சட்டப்படியும், நாடாளுமன்ற நடைமுறைக்கு உட்பட்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் கன்சாலோ கலிகோஸ், பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் அந்நாட்டு மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், அம்முடிவு சட்டத்திற்கும், அந்நாட்டு நாடாளுமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் கூறினார்.

பாகிஸ்தானை ஜனநாயகப் பாதைக்கு அழைத்து சென்று நவீன நாடாக மாற்றுவது அந்நாட்டு தலைவர்களின் கடமை என்றும், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயக பாகிஸ்தான் அரசுடனான ஒத்துழைப்பு மற்றும் நெருங்கிய தொடர்புகளை அமெரிக்கா தொடரும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் தற்போது அரசியல் மாற்றங்கள் குறித்து கவனமாக கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து அங்குள்ள தமது அதிகாரிகளுடன் விவாதித்துள்ளதாகவு‌ம் கூறிய கலிகோஸ், தீவிரவாத‌த்திற்கு எதிரான போரில் இஸ்லாமாபாத்துடன் அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

Show comments