Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.பி.டி., சி.டி.பி.டி-யில் இந்தியா கையெழுத்திட வேண்டும்: ஜப்பான்!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (16:34 IST)
அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை ( Non Proliferation Treaty -NPT), விரிவான அணு ஆயுத சோதனை தடை உடன்பாடு ( Comprehensive Test Ban Treaty -CTB T) ஆகியவற்றில் இந்தியா கண்டிப்பாக கையெழுத்திட வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவின் எரிசக்தி தேவையை தாங்கள் அறிந்திருந்தாலும், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால், உலகளவிலான அணு ஆயுத பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதற்காக என்.பி.டி., சி.டி.பி.டி.-யில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்துவதாக ‌புதுடெல்லி வந்துள்ள ஜப்பான் அயலுறவு அமைச்சர் மாஷிகோ கௌமுரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அணுசக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவில் ( NS G) இடம்பெற்றுள்ள ஜப்பான், 2ஆம் உலகப் போரில் அணு ஆயுத தாக்குதலில் சிக்கி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்பதால், உலகம் முழுவதும் அணு ஆயுதப் பரவலை தடுக்க தீவிரவமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

வியன்னாவில் வரும் 21ஆம் தேதி துவங்கும் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுக் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என ஜப்பான் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், என்.பி.டி., சி.டி.பி.டி.-யில் இந்தியா கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என இன்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments