Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாத‌த்தை நசு‌க்க வே‌ண்டு‌ம்: மன்மோகன் சிங்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (17:16 IST)
சமூக‌க் க‌ட்டமை‌ப்பை‌ச் ‌சீ‌ர்குலை‌க்கு‌ம் நோ‌க்கமுடைய பய‌ங்கரவாத‌த்தை நசு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற மன‌நிலை அனைவரு‌க்கும் வரவே‌ண்டு‌ம ் ; குரூர முக‌ம் கொ‌ண்ட பய‌ங்கரவாத‌ம் தலையெடு‌ப்பத‌ற்கு ஒருபோது‌ம் அனும‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்!

கொழு‌ம்‌பி‌ல் இ‌ன்று துவ‌ங்‌கிய தெ‌ற்கா‌சிய நாடுக‌‌ளி‌ன் ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு மாநா‌ட்டி‌ல் பே‌சிய ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், காபூலில் இந்திய தூதரகத்தின் மீதான த‌ற்கொலை‌த் தாக்குதல், பெங்களூரு, அகமதாபாத் நகர‌ங்க‌ளை‌க் கு‌றிவை‌த்த சமீபத்திய தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட ச‌‌ம்பவ‌ங்க‌ள் பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனத்தை நினைவுபடுத்துவதாக குறிப்பிட்டார்.

உலக நாடுகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள பயங்கரவாதம் முற்றிலுமாக நசுக்கப்பட வேண்டும் என்று வ‌லியுறு‌த்‌திய ‌பிரதம‌ர், சமூக ஒற்றுமையை‌‌ச் ‌சீ‌ர்குலை‌க்க முயலு‌ம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தோற்றுவிடக் கூடாது, அத‌ற்கான மன‌நிலை அனைவரு‌க்கு‌‌ம் வர வே‌ண்டு‌ம் என்றா‌ர்.

தெ‌ற்கா‌சிய நாடுக‌ளி‌ன் ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு மாநாடு நட‌க்கு‌ம் நேர‌த்‌திலு‌ம், த‌மி‌ழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ச‌ண்டையை ‌சி‌றில‌ங்க அரசு தொட‌ர்‌ந்து நட‌த்‌தி வரு‌கிறது.

சார்க் மாநாடு துவங்குவதற்கு முன்பாக கொழும்பு நகரின் பெரும்பாலான சாலைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments