Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர் பிரச்சனை: விசாரணைக்கு ‌சி‌றில‌ங்க அரசு உத்தரவு!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (14:32 IST)
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய பிரச்சனையை பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நடந்த சந்திப்பில் எழுப்பியதைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடத் த‌ ‌ சி‌றில‌ங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

PIB
கொழும்பில் இன்று துவங்கும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ‌சி‌றில‌ங்கா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், நேற்று மாலை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்திய- ‌சி‌றில‌ங்க கடல் எல்லைக்கு அருகே மீன்பிடி பணியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், தமிழக மீனவர்களிடம் சிறிலங்க கடற்படை மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து சமீபத்தில் சிறிலங்க கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு தமிழக மீனவர்கள் உயிரிழந்த பிரச்சனை குறித்து விசாரிக்க ‌சி‌றில‌ங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments