Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் அத்துமீறி தா‌க்குத‌ல்: பா‌கி‌ஸ்தா‌ன் மறுப்பு!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (17:58 IST)
இந்தியா குற்றம்சாட்டியது போல் வடக்கு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில், தனது படை‌யின‌ர் அத்துமீறி தா‌க்குத‌ல் நடத்தவில்லை என பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் படை‌த் தர‌ப்பு‌ப் பே‌ச்சாள‌ர் மேஜர் ஜெனரல் அத்ஹர் அப்பாஸ், தங்கள் ஆய்வறிக்கையின் படி இன்று (நேற்று) எல்லையில் எந்த தா‌க்குதலு‌ம் நடக்கவில்லை என்றார்.

இதுகுறித்து உள்நா‌ட்டு‌ப் பாதுகா‌ப்பு அ‌திகா‌ரிக‌ளிடம் தாம் பேச்சு நடத்தியதாகவும், இந்தியா குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமின்றி, எல்லை‌‌யி‌ல் எ‌ங்கு‌ம் அ‌த்து‌‌மீ‌றிய தா‌க்குத‌ல் எதுவும் நடக்கவில்லை, அங்கு அமைதியான சூழலே நிலவியதாக அவ‌ர்க‌‌ள் தெ‌ரி‌வி‌த்ததாகவும் அப்பாஸ் கூறியுள்ளார்.

காஷ்மீரின் வடக்கு பகுதியில் பாரமுல்லா மாவட்ட‌ம் நவ்காம் பகுதியில் காலை 11.30 மணியளவில் அடுத்தடுத்து 2 முறை பாகிஸ்தான் படை‌‌யின‌ர் தா‌க்குத‌ல் நடத்தியதாக இந்திய அரசு குற்‌றம்சா‌ற்‌றிய ‌‌நிலை‌யி‌ல், பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments