Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைக‌ள் வெ‌ளியேறு‌ம்

Webdunia
ஞாயிறு, 20 ஜூலை 2008 (13:24 IST)
ஈராக்கில் சதாம் உசேன் ஆட்ச ியை முடி‌த்து‌வி‌ட்டு, பு‌திய ஆ‌ட்‌சி அமை‌ந்த ‌பி‌ன்னரு‌ம் அ‌ங்கு முகா‌மி‌ட்டிரு‌க்கு‌ம் அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் அடு‌த்த ஆ‌ண்டி‌ல் முழுவதுமாக வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌ர்‌ஜ் புஷ‌் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஈரா‌க்‌கி‌ல் ‌தீ‌விரவாத‌ச் செயலை முழுமையாக ஒடு‌க்கு‌ம் ப‌ணி‌யி‌ல் சுமார் ஒன்றரை லட்சம் அமெரிக்க படையினர் அங்கு உள்ளனர்.

ஈரா‌க்‌கி‌ல் இரு‌க்கு‌ம் அமெ‌ரி‌க்க படை ‌வீர‌ர்களை கு‌றி‌ வை‌த்தே பல தா‌க்குத‌ல்க‌ள் நட‌த்த‌ப்படுவதாலு‌ம், அமெரிக்க படைகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவத ால ு, ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை ‌ திரு‌ம்ப‌ப ் பெற வேண்டும் என்று அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வற்புறுத்தி வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா, தான் பதவிக்கு வந்தால், 16 மாதங்களில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதிபர் புஷ ், படைகளை ‌ திரு‌ம்ப‌ப ் பெற்றால், ஈராக் தீவிரவாதிகளின் வன்முறை அதிகரித்து விடும் என்று கூற ி தவிர்த்து வந்தார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், அமெரிக்க படைகளை ‌ திரு‌ம்ப‌ப் பெற காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று ஈராக் பிரதமர் நுரி அல்-மாலிகி கடந்த வாரம் வலியுறுத்தினார்.

இது கு‌றி‌த்து புஷ், ஈராக் பிரதமர ுட‌ன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச்சுவார்த்தை நடத்த ினா‌ர ். இ‌ந்த பே‌ச்சு வா‌ர்‌த்தை‌யி‌ல், அமெ‌ரி‌க்க படைகளை‌த் ‌திரு‌ம்ப‌ப் பெறுவது ப‌ற்‌றி ஒ‌‌ப்பு‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

தன்னிச்சையாக தேதி நிர்ணயிக்காமல், ஈரா‌க்‌கி‌ல் அமை‌தி‌யான சூ‌ழ்‌நிலை ஏ‌ற்படுவத‌ன் அட ிப்படையில் பட ைக‌ள் ‌கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக திரு‌ம்ப‌ பெற‌ப்படு‌ம் என்றும் ஒ‌‌ப்பு‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

Show comments