Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் இ‌ந்‌திய‌ர் ‌விடுதலை!

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (13:04 IST)
உளவு பா‌ர்‌த்த கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ன் பே‌ரி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த இ‌ந்‌திய‌ர் ரா‌ம் ‌பிரகா‌ஷ் எ‌ன்பவரை ப‌த்து ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு அவ‌ரி‌ன் த‌ண்டனை கால‌ம் முடி‌ந்ததை மு‌ன்‌னி‌ட்டு பா‌‌கி‌ஸ்தா‌ன் அரசு ‌விடுதலை செ‌ய்து‌ள்ளது.

ரா‌ம் ‌பிரகா‌ஷ், 51, இ‌ன்று காலை லாகூ‌ரி‌ல் உ‌ள்ள கோ‌ட் ல‌க்ப‌த் ‌சிறை‌யி‌ல் இரு‌ந்து ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். அவ‌ர் தன‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட 10 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனையை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ததை மு‌ன்‌னி‌ட்டு அவரை ‌விடு‌வி‌க்குமாறு பா‌கி‌ஸ்தா‌ன் உ‌ள்துறை அமை‌ச்சக‌ம் நே‌ற்று உ‌த்தர‌வி‌ட்டது.

‌ சிறை அ‌திகா‌ரிக‌ள் ரா‌ம் ‌பிரகாஷை இ‌ந்‌திய அ‌திகா‌ரிக‌ளிட‌ம் ஒ‌ப்படை‌ப்பத‌ற்காக வாகா எ‌ல்லை‌‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்றதாக தொலை‌க்கா‌ட்‌சிக‌ள் கூறு‌கி‌ன்றன.

கட‌ந்த மே மாத‌ம், ம‌த்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி பா‌கி‌ஸ்தா‌ன் பயண‌ம் மே‌ற்கொ‌ண்டதை மு‌ன்‌னி‌ட்டு, ந‌ல்லெ‌‌ண்ண அடி‌ப்படை‌யி‌ல் 96 ‌மீனவ‌ர்க‌ள் உ‌ள்பட 99 இ‌ந்‌திய‌க் கை‌திகளை பா‌கி‌ஸ்தா‌ன் அரசு ‌விடுதலை செ‌ய்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments