Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒப்பந்த நிறைவேற்றம் தாமதம் கவலையளிக்கிறது: அமெரிக்கா!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (14:20 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுவரும் தாமதம் கவலையளிக்கிறது என்று கூறியுள்ள அமெரிக்கா, தாமதமாகும் ஒவ்வொரு நாளும் நிலைமையை சிக்கலாக்கிவிடும் என்று கூறியுள்ளது.

வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவுத் துறையின் பேச்சாளர் ஷான் மெக்கார்மாக், அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல் தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்டுவரும் ஒவ்வொரு முயற்சி குறித்தும் தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுடைப்படுத்திட வேண்டும் என்பதில் புதுடெல்லியுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ள மெக்கார்மாக், அமெரிக்காவில் புதிதாக பதிவியேற்கப்போகும் அரசுதான் இதனை ஆராயப் போகிறது என்றாலும், அதற்கு முன்பு சர்வதேச அணு சக்தி முகமை மற்றும் அணு தொழில்நுட்ப விற்பனைக் குழு (என்.எஸ்.ஜி.) ஆகியன விவாதிக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடமிருந்து ஒப்புதல் பெற்றுவிட்ட காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்துவரும் இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்காததால் சிக்கலில் உள்ளது.

தங்களுடைய எதிர்ப்பையும் மீறி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முற்பட்டால் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று இடது கூட்டணி வெளிப்படையாக அறிவித்திருக்கும் நிலையில், வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து ஒப்பந்தம் நிறைவேறுமா அல்லது ஆட்சிக்காக ஒப்பந்தம் கிடப்பில் போடப்படுமா என்பது தெரிந்துவிடும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments