Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம்!

Webdunia
சனி, 31 மே 2008 (16:23 IST)
கொத்து வெடிகுண்டுகள் (cluster bombs) என்று அழைக்கப்படும் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகளை பயன்படுத்த தடை விதிக்கும் உடன்படிக்கையில் 100 நாடுகள் கையெழுத்திட்டன.

இந்த தடை மீதான பேச்சு வார்த்தை அயர்லாந்து தலைநகர் டப்ளினில் 10 நாட்களாக நடைபெற்றது. இதில் இந்த தடை உடன்படிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

முதலில் கொத்து வெடிகுண்டுகள் என்றால் என்ன என்று பார்ப்போம்: ஏவுகணை போன்ற ஒரு அமைப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட குண்டுகள் சேர்த்து வைத்து அடைக்கப்பட்டிருக்கும். இதை விமானத்திலிருந்து வீசினால் போதுமானது. 9 மைல்கள் இந்த கொத்து வெடிகுண்டு பறந்து அதன்பிறகு அந்த 200க்கும் மேற்பட்ட குண்டுகள் சிதறி விழுந்து பரவலாக வெடிக்கும்.

குண்டுகளை பரவலாக வீசி விட்டு செல்லும் இதனால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தானவை. இந்த கொத்து வெடிகுண்டு தொகுப்பில் உள்ள ஒவ்வொரு வெடிகுண்டும் ஒரு குளிர்பான கேன் அளவிற்கு இருக்கும். இதில் நூற்றுக்கணக்கான உலோகத்துண்டுகள் காணப்படும். இது வெடித்து சிதறினால் 25 மைல்களுக்கு அப்பாலும் சேதங்களையும், காயங்களையும் ஏற்படுத்தும ்.

இத்தகைய அபாயமான தொகுப்பு வெடிகுண்டை தடை செய்வதில் 100 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்த பயங்கரமான வெடிகுண்டுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து சேர்த்து வைத்திருக்கும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா,சீனா ஆகியன இந்த தடைக்கு எதிர்ப்புத் தெர்வித்துள்ளன.

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் இந்த தடை உத்தரவை " உலகை பாதுகாப்பான வசிப்பிடமாக மாற்றும் முயற்சியில் இந்த தடை முதல் கட்ட சாதனை என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இத்தகைய வெடிகுண்டுகள் போர்க் காலத்தில் மிகுந்த பயனுள்ளவை என்று கூறியுள்ளது. ஆனால் குண்டுகள் வெடிக்காமல் போனால் இது அப்பாவி மக்களுக்கு பெரும் ஆபத்துகளை விளைவிக்கக் கூடியது என்று தடையை ஆதரிக்கும் நாட்டுப் பிரதிநிதிகள் டப்ளின் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலக்கண்ணிவெடி தடை ஒப்பந்தத்திலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இன்னமும் கையெழுத்திடவில்ல ை.

பாலஸ்தீனம ், லெபனான் ஆகிய நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் இத்தகைய பயங்கர வெடிகுண்டுத் தொகுப்புகளை வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments