Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின் அதிர்வுகளால் லட்சக்கணக்கான வீடுகள் தரைமட்டம்!

Webdunia
புதன், 28 மே 2008 (11:49 IST)
இம்மாதம் 12ம் தேதி சீனாவின் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த பின் அதிர்வுகளில் மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் இரண்டு சக்தி வாய்ந்த பின் அதிர்வுகள் ஏற்பட்டன. இது குவின்சுவான் மற்றும் இதற்கு அருகில் உள்ள நிங்கியாங் பகுதிகளில் உணரப்பட்டது. இதிலும் ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே சீன பூகம்பத்திற்கு உயிர்ழந்தோர் எண்ணிக்கை 67,183 என்று அரசு தரப்புகள் உறுதி செய்துள்ளன. மேலும் 20,790 பேர் காணவில்லை என்றும் அரசு தரப்பு கூறியுள்ளது.

இந்த பூகம்பத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை மட்டும் 3,62,000 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தம்பி மேல இருக்க அன்பு வேற.. அரசியல் வேற..! - விஜய் குறித்து சீமான் பேச்சு!

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னொரு மருத்துவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி தகவல்..!

சொர்க்கத்தில் இருந்து இந்திரா காந்தி வந்தாலும் காஷ்மீருக்கு 370வது பிரிவு கிடைக்காது: அமித்ஷா

2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை! ரசீதும் கிடைக்கும்..!

Show comments