Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன பூகம்ப பலி 50,000ஐ தாண்டியது!

Webdunia
வியாழன், 15 மே 2008 (20:00 IST)
தென் மேற்கு சீனாவில் ‌தி‌ங்க‌ட்‌கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தி‌‌ற்கு பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கட‌ந்து‌ள்ளது. ஒரு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் அ‌திகமானோ‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவான இந்த பூகம்பம் சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நில நடுக்கம் என்று அறியப்படுகிறது.

சிச்சுவான் பகுதியில் மட்டு‌ம் ‌வியாழ‌க்‌கிழமை மாலை வரை எடு‌க்க‌ப்ப‌ட்ட கண‌க்‌கி‌ன்படி 19,509 பேர் உயிரிழந்து‌ள்ளதாகவு‌ம், ஒரு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் அ‌திகமானோ‌ர் காயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம் அ‌ம்மாகாண துணை ஆளுந‌ர் ‌லீ செ‌ங்‌க்யூ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

50,000‌ க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌வீர‌ர்க‌ள் ‌மீ‌ட்பு‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள‌ன‌ர் எ‌ன்று‌ம், இடுபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கியு‌ள்ள பல‌ர் உ‌‌யிருட‌ன் இரு‌ப்பதாகவு‌ம், அவ‌ர்களை ‌மீ‌ட்கு‌ம் ப‌ணி நட‌ந்து வருவதாகவு‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

1976 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட இதைவிட பயங்கரமான பூகம்பத்தில் தாங்ஷான் நகரத்தில் மட்டும் 2,40,000 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் ஆகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments