உலகத்தில் ஏழை எளிய மக்கள் உணவு நெருக்கடிகளால் பெரிதும் அவதியுற்று வரும் வேளையில ், எவ்வளவு உணவு பொருட்கள ் பயனில்லாமல் வீணடிக்கப்படுகின்றன என்ற விவரத்தை ஐ.நா. பங்கேற்ற சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் அமைப்பு, ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச தண்ணீர் நிர்வாக அமைப்பு ஆகியவை வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றிற்கு 30 சதவீத உணவு யாருக்கும் பயனில்லாமல் வீணடிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
இது போன்று உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதை பற்றி விலாவாரியாக பேசும் இந்த அறிக்க ை, வீணடிக்கப்படும் உணவு என்பது மட்டுமல்ல, அதற்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீரும்தான் என்று கூறியுள்ளது.
அதாவது உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஆண்டொன்றிற்கு 30 சதவீத உணவுகள் வீணடிக்கப்படுகிறது என்றால், அதற்காக பயன்படுத்தப்பட்ட தண்ணீர், 500 மில்லியன் மக்கள் குடிப்பதற்கான தண்ணீருக்கு சமம் என்கிறது இந்த அமைப்பு.
webdunia photo
WD
சமையலறைகள் உட்பட, உணவுப்பொருள் பதனிடுதல், பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் கிட்டங்கி வசதிகளின்மை ஆகியவற்றால் மிகப்பெரிய அளவில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன என்று கூறும் இந்த அமைப்பு சூப்பர் மார்க்கெட்டுகளில் வீணடிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு அளவேயில்லை என்று கூறியுள்ளது.
இந்த வீணடிக்கப்படும் உணவுப் பொருட்களை பயிர் செய்வதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் இதனால் வீணடிக்கப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம் என்று கூறுகிறது இந்த ஆய்வறிக்கை. உணவு தானியப் பயிர்களுக்காக செலவிடப்படும் நீரில் பாதிக்கு மேல் வீணடிக்கப்பட்டு வருகிறது.
webdunia photo
WD
உலகம் முழுதும் ஆரோக்கியமான உணவுகளை வழங்க போதுமான அளவு உற்பத்தி இருந்து வருகிறது. ஆனால் விநியோகம், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளால் பலர் பசியில் வாட சிலர் அதிகம் உண்டு மகிழ்கின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
நமக்குத் தேவையான உணவுப் பொருட்களின் உற்பத்தியில் நாம் செலுத்தும் கவனம், வீணடிக்கப்படும் உணவுப்பொருட்கள் பற்றி இல்லை என்று எச்சரிக்கை செய்கிறது இந்த ஆய்வறிக்கை.