Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன பூகம்ப பலி 12,000 ஆனது!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (16:28 IST)
தென்மேற்கு சீன மாகாணமான சிச்சுவானில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 12,000ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் பல செய்திப் பத்திரிக்கைகள் இதனை ஒரு துன்ப தினமாக அறிவித்து "பூமி நகர்ந்த தினம்" என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையே மிகப்பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மதியம் 6.1 என்ற ரிக்டர் அள‌வி‌ற்கு பலமான பின் அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடுமையான மழை, சாலைகளின் மோசமான நிலைகளால் மீட்புப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

குறிப்பாக நிலநடுக்க மையத்தை அடையும் வழிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் மீட்புப் படையே இன்று காலைதான் சென்றடைந்துள்ளது. இன்று இரவு வாக்கில்தான் சாலைகளில் உள்ள இடிபாடுகளையும், நிலச்சரிவுகளையும் அகற்ற முடியும் என்று கூறப்படுகிறது. இன்னமும் பலர் இடிபாடுகளிடையே சிக்கியிருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

பெய்ச்சுவான் பகுதியில் இடிபாடுகளிடையே சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாக போராடி வருகின்றனர். பெய்ச்சுவானி‌‌ல் இருந்து 20கிமீ தொலைவில் உள்ள ஆன்சாங் என்ற இடத்திற்கு நீர், மின்சாரம், மற்றும் எரிவாயு வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இதுவரை இடிபாடுகளிலிருந்து 58 பேர்களை மட்டுமே மீட்க முடிந்தது என்று சீனாவின் நிலநடுக்கக் கழகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக மீட்புப் பணிகள் கடினமாக உள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments