Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா‌வி‌ல் பூகம்ப பலி 10,000ஐ தாண்டியது!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (13:58 IST)
தென் மேற்கு சீனாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 10,000 பேர்களை கடந்துள்ளது.

பள்ளிக் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமான மாணவ - மாணவிகள் பலியாகியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ரிக்டர் அளவு கோலில் 7.9 என்று பதிவான இந்த பூகம்பம் சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நில நடுக்கம் என்று அறியப்படுகிறது.

சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் சிச்சுவான் பகுதியில் மட்டுமே 10,000 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

பூகம்ப மையத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள பெய்ச்சுவான் என்ற இடத்தில் இருந்த பள்ளியில் 7 மாடிக் கட்டிடம் தரை மட்டமாகி அதன் இடிபாடுகள் 2 மீட்டர் உயரத்திற்கு குவிந்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இது தவிர மற்றொரு பள்ளியும் தரை மட்டமாகியுள்ளது. இந்த இரண்டு பள்ளிகளிலும் சேர்த்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணிகளுக்காக 16,000 பேர் கொ‌ண்ட பாதுகாப்புப் படையை ‌நி‌க‌ழ்‌விடங்களுக்கு அனுப்பியுள்ளது சீன அரசு. ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

1976 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட இதைவிட பயங்கரமான பூகம்பத்தில் தாங்ஷான் நகரத்தில் மட்டும் 2,40,000 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் ஆகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments