Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூயார்க்கில் ஆ‌ப்‌பி‌ரி‌க்க‌ர்க‌ள் ஆர்‌ப்பாட்டம்!

Webdunia
வியாழன், 8 மே 2008 (14:04 IST)
கறு‌ப்‌பின‌த்தவ‌ர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம்சா‌ற்றப்பட்ட 3 காவ‌ல் அதிகாரிகளை விடுதலை செய்ததை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நியூயார்‌‌க்கில் ஆர்‌ப்பாட்டம் செய்தனர்.

2006 ஆம் ஆண்டு சான் பெல் என்பவரை ஜமைக்காவின் இரவு விடுதிக்கு வெளியே 3 காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

இதில் குற்றம்சா‌ற்றப்பட்ட 3 காவல் அ‌திகா‌‌ரிகளையும் நிரபராதிகள் என்று நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து நியூயார்க் நகரில் கறுப்பர்கள் உள்ளிட்ட பலர் ஆர்பாட்டம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னணி ஆஃப்ரிக்க அமெரிக்க தலைவர் வேவ் ஷார்ப்டன், சுட்டுக்கொல்லப்பட்ட சான் பெல்லை திருமணம் புரிவதாயிருந்த நிகோல் பால்டர், சான் பெல்லின் இரண்டு நண்பர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்பாட்டக்காரர்கள் அந்த 3 பேர் மீதான விசாரணை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments