Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மியான்மாருக்கு ஐரோப்பிய கமிஷன் புயல் நிவாரண நிதி!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (11:50 IST)
சுமார் 10,000 பேர்களுக்கும் மேல் உயிரிழந்ததாக அஞ்சப்படும் மியான்மாரை தாக்கிய நர்கீஸ் புயலில் பாதிக்கப்பட்டோருக்கு ஐரோப்பிய கமிஷன் 2 மில்லியன் யூரோக்கள் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

மியான்மாரில் புயலால் பாதிக்கப்பட்டு உணவிற்கும் இருப்பிடத்திற்கும் போராடி வரும் மக்களைக் காப்பாற்ற ஐரோப்பிய கமிஷனின் மனித நேய உதவித் துறை இந்த தொகையை திரட்டியுள்ளது.

" ஒவ்வொரு மணி நேரமும் மியான்மாரிலிருந்து வரும் புயல் அழிவு செய்திகள் அங்கு உள்ள நிலைமைகளை தெரிவிக்கிறது. இது பயங்கர அழிவாகும். இதற்கு துரித கதியில் நிவாரணம் தேவைப்படுகிறது" என்று ஐரோப்பிய கமிஷனினின் லூயிஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

இந்த இயற்கைப் பேரழிவிலிருந்து பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்க உலக நாடுகளிடம் உதவி கோரியிருந்தார் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் நியான் வின்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments