Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் உலகின் மிகப்பெரிய கடற்பாலம் திறப்பு!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (12:27 IST)
சீனாவில் இரு நகர‌ங்களு‌க்கு இடையேயான உல‌கி‌ன் ‌மிக ‌நீளமான கட‌ற்பால‌ம் ‌திற‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

webdunia photoWD
36 ‌ கி.‌மீ. தூர‌ம் உ‌ள்ள இ‌ந்த ஹேங்ஸூ வளைக்குடாப்பாலம், ஷாங்காயிலிருந்து தொழிற்சாலை நகரமான நிங்போவை கடல் வழியாக இணைக்கிறது. உலகிலேயே மிக நீளமான கடற்பாலம் இதுவே என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

இ‌ந்த இரு நகர‌ங்களு‌க்கு‌ம் இடையே 150 கி.மீ க்கும் மேல் இருந்த சாலை வ‌ழி தூர‌ம் தற்போது இந்த கடற்பாலத்தால் வெறும் 36 கி.மீ. ஆக குறைந்துள்ளத ு.

இந்த பாலக் கட்டுமானத்தில் தனியார் முதலீட்டாளர்களின் முதலீடுகளும் சேர்ந்துள்ளத ு. சீ ன உள்கட்டமைப்ப ு திட்டத்தில ் முதன ் முதலா க தனியார ் முதலீடுகள ் வரவேற்கப்பட்டுள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

6 வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் வாகனங்கள் சுமார் 100 கி.மீ வேகம் வரை செல்லலாம். 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கடற்பாலக் கட்டுமானம் 2003ம் ஆண்டு நவம்பரில் துவங்கியது.

webdunia photoWD
சீனாவில் இதற்கு முன்பு ஷாங்காயிலிருந்து யாங்ஷான் துறைமுகத்தை இணைக்கும் 32.5 கி.மீ. கடற்பாலம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

12 லட்சம் வரை வருமான வரி இல்லை.. இந்த திட்டம் யாருக்கு பொருந்தும்? யார் யாருக்கு பொருந்தாது?

Swiggy, Zomato ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகை.. என்ன தெரியுமா?

12 லட்சம் வரை வருமான வரி கிடையாது.. புதிய வரிவிகிதம் முழு விவரம்!

இது இந்திய பட்ஜெட்டா? பீகார் பட்ஜெட்டா? பீகாருக்கு குவியும் திட்டங்கள்..!

3 துறைகளில் AI மையம், பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கு தொழில்கடன்: நிர்மலா சீதாராமன் பட்ஜெட்..!

Show comments