Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் அதிபர் பாக். வருகை!

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (13:40 IST)
பாகிஸ்தானில் பதவியேற்றுள்ள புதிய கூட்டணி அரசின் தலைவர்களையும் அதிபர் பர்வே‌‌ஸ் முஷாரப்பையும் சந்திக்க ஈரான் அதிபர் அஹமதினெஜாத் இன்று இஸ்லாமாபாத் வந்து சேர்ந்தார்.

இங்கிருந்து கொழும்பு செல்வதற்கு முன் பாகிஸ்தான் அதிபரையும் பிரதமர் கிலானியையும் சந்திக்க அஹமதினெஜாத் திட்டமிட்டுள்ளார்.

ஈரான ்- பாகிஸ்தான ்- இந்திய எரிவாயுக் குழாய் திட்டம் குறித்து இந்த பேச்சு வார்த்தைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த எரிவாய்க்குழாய் திட்டம ் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் நாடுகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்திடச் செய்யவும் அஹமதினெஜாத் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எரிவாய்க்குழாய் திட்டத்தில் 4வது நாடாக சீனாவை சேர்க்கலாம் என்ற பரிந்துரை பற்றி பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ஷகேரி கூறுகையில், இந்த 7.4 பில்லியன் டாலர்கள் எரிவாயுக் குழாய் திட்டம் இந்தியா-பாகிஸ்தான ்- ஈரான் ஆகிய நாடுகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சீனாவை சேர்ப்பது குறித்து ஈரான் உடன்பாடான பார்வை கொண்டிருந்தாலும், அதனை ஒரு தனி திட்டமாகவே செயல்படுத்த முடியும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments