Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா மீது கர்ஸாய் கண்டனம்!

Webdunia
சனி, 26 ஏப்ரல் 2008 (14:50 IST)
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஆப்கானில் போர் நடத்தும் முறையை ஆப்கான் அதிபர் கர்சாய் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கொள்கை தீர்மானங்களில் தனது அரசிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "தாலிபான் தீவிரவாதிகள் என்றும் தாலிபானுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றும், சந்தேக அடிப்படையில் அமெரிக்க படையினர் செய்யும் கைதுகளை நிறுத்தவேண்டும், இந்த கைதுகளும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் நடத்தப்படும் விதமும் தாலிபான் அமைப்பினர ் ஆயுதங்களைத ் துறக்கும் நடவடிக்கையைத ் தடுக்கிறத ு" என்று கூறியுள்ளார்.

தாலிபான ், அல ்- கய்ட ா பயங்கரவாதிகளின ் புகலிடம ் பாகிஸ்தான ் என்று கூறிய கர்ஸாய், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆப்கான் கிராமங்களில் நடத்த முடியாது என்று கூறினார்.

அமெரிக்க போர்ப்படையினர் ஆப்கானிலிருந்து தாலிபான்களை விரட்டுகின்றனர். அவர்கள் நேராக பாகிஸ்தான் சென்று அங்கு மீண்டும் குழுவாக ஒன்று சேர்ந்து ஆயுதங்களை எடுக்கின்றனர் என்று அவர் அந்த பேட்டியில் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமரன் சர்ச்சை: முகுந்த் போர் குற்றவாளின்னு நான் சொல்லல.. இயக்குனர் அப்படி காட்டியிருக்கார்! - திருமுருகன் காந்தி விளக்கம்!

பெண்களை 3 மாதத்தில் கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் பரிசு.. புதுவிதமான மோசடி..!

எல்லா முதலீட்டையும் குஜராத்துக்கு திருப்பிவிடும் மோடி? - மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தெலுங்கானா முதல்வரும் குற்றச்சாட்டு!

தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1300 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

Show comments