Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிவைப்பு!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (20:17 IST)
சரப்ஜித் சிங்கிற்கு கருணை காட்ட வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்த வேண்டுகோளையடுத்து, தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு பாகிஸ்தான் அரசு தள்ளிவைத்துள்ளது.

1990 ஆம் ஆண்டு லாகூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. கடந்த 17 ஆண்டுகளாக லாகூர் சிறையில் வாடும் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை ஏப்ரல் 1ஆம் தேதி நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்தியத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு மாத காலத்திற்கு தண்டனை நிறைவேற்றம் தள்ளிவைக்கப்பட்டது. வரும் மே 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு இன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், 17 ஆண்டுக்காலம் சிறையிலுள்ள சரப்ஜித் சிங்கிற்கு மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசு கருணை காட்ட வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

Show comments