Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய நல்லுறவுக்கு காஷ்மீர் தீர்வே அடிப்படை: பாகிஸ்தான்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (17:07 IST)
இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்று பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்திற்கான அமைச்சர் ஷமான் கய்ரா கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் யுசுப் ரஷா கிலானி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 23 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர ்.

பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்திற்கான அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள ஃகமார் உஸ் ஷமான் கய்ரா கூறுகையில ், " இந்தியாவுடன் வர்த்தகத்தொடர்ப ு, மக்கள் நல்லுறவினை நாங்கள் விரும்புகிறோம். மக்களிடையே நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். காஷ்மீர் விவகாரம் சாதாரணமானது. இதனை ஒருபக்கமாக வைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. அதற்கு தீர்வுகாண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம ்" என்றார்.

" அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் இந்த சகாப்தத்தில ், இந்தியாவுடன் நல்லுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறோம். அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த நாடும் செயல்பட முடியாது. இந்த பாகிஸ்தானின் புதிய அரசு முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் வழிமுறைகைளை பின்பற்ற ி, காஷ்மீர ் விவகாரத்திற்கு தீர்வுகாணும ்.

கடந்த 1990ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய 'காஷ்மீர் கொள்க ை' அப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால ், அதன்பிறகு வந்த அரசுகள் எல்லாம் அந்த கொள்கையைத்தான் பின்பற்றினர ்" என்று அவர் மேலும் கூறினார ்.

பாகிஸ்தானின் அயலுறவு அமைச்சராகவும ், பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ள உஷைன் ஹக்கானி கூறுகையில ், " தனிப்பட்ட செயல்பாடுகளை விரும்பவில்லை இந்தியாவுடன் இயல்பான உறவுகளை மேம்படுத்துவதற்கு புதிய அரசு முக்கியத்துவம் அளிக்கும ்" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

Show comments