Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்க ‌‌கிழ‌க்கு மாகாணத் தேர்தல்: 3 தமிழ் கட்சிகள் கூட்டணி!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (17:03 IST)
சிறிலங்காவின் ‌கிழ‌க்கு மாகாண‌த்‌தி‌ல் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ள தேர்தலின் மூலம் தமிழ் பேசுபவரை முதலமைச்சராக்கும் முயற்சியாக மூன்று தமிழ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்ப ு, தமிழ் ஐக்கிய விடுதலை முன்னண ி, ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகிய மூன்று தமிழ் கட்சிகள் இணைந்துள்ள ன.

தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் கூறுகையில ், " மே 10-ம் தேதி நடக்க உள்ள வாக்குப் பதிவில் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில ், கூட்டணியை மேலும் விரிவுபடுத்த ஈழ மக்கள் ஜனநாயக இயக்கம் உட்பட மற்ற தமிழ் கட்சிகளை இணைக்க பேச்சு நடத்தி வருகிறோம ்" என்றார்.

தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன ், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் வி.ஆனந்தசங்கர ி, ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி தலைவர் ஜி.ஸ்ரீதரன் ஆகியோர் நேற்று கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றினர்.

"13 வது திருத்தத்தின்பட ி, சிறிலங்காவில் நிலவும் இன மோதல்களுக்கு தீர்வு காணுவதை மாகாணக்குழு முக்கி ய அம்சமாக கொண்டுள்ளது. எனவ ே, கிழக்கு மாகாணக்குழுத் தேர்தலுக்குப்பிறகு தமிழ் பேசும் முதலமைச்சர் தான் வரவேண்டும்" என்று சித்தார்தன் மேலும் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

Show comments