Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக் கைதிகளை விடுதலை செய்ய பேச்சு: பாக். ராணுவம்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (16:29 IST)
இந்தி ய, பாகிஸ்தான் சிறைகளில் வாடும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து உயர்மட்ட அளவில் பேச்சு நடந்து வருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

சண்டிகரில் நடக்கும் இருநாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி முகமது ஹாரூன் அஸ்லாம் தலைமையில் 14 வனச்சரகள் பங்கேற்றுள்ளனர். அப்போத ு, " கடந்த 1965ம் ஆண்டு போர ், 1971 ஆம் ஆண்டு மோதலில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது குறித்து இருநாட்டு அயலுறவு அமைச்சர்கள் அளவில் பேச்சு நடந்து வருகிறது. உயர்மட்ட அளவில் நடந்துவரும் இந்த பேச்சில் கைதிகள் விடுதலை செய்யப்பட போதிய வாய்ப்பு உள்ளத ு" என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்ற உடன் நடக்கும் முதல் எல்லைப் பாதுகாப்பு படையினரின் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இருநாட்டு எல்லையில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குறித்து அஸ்லாம் கூறுகையில ், " பாகிஸ்தானில் இருந்து அவை கொண்டுவரப்பட வாய்ப்பில்லை. எனினும ், இந்த மூன்று நாள் கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய ா, பாகிஸ்தானுக்கு போதைப்பொருள் வருவதாக கூறப்படுவது வெறும் புரளி. கடத்தல் சம்பவங்களை முற்றுலுமாக தடுப்பது குறித்து மிக விளக்கமாக விவாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments