தனி மாநிலத்திற்கு இந்தியா சம்மதிக்காது: ‌சி‌றில‌ங்கா!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (18:29 IST)
தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைக்க இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது என்று ‌சி‌றில‌ங்க பிரதமர் விக்ரமசிங்க கூறியுள்ளார ்.

நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள அவர் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவத ு:

”விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிராபகரன் இந்தியாவின் சில பகுதிகள் உட்பட இலங்கையில் தமிழ் மாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இலங்கையில் தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைத்தால் அது இந்தியாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும ். எனவ ே, அதற்கு இந்தியா ஒருபோதும் சம்மதிக்காத ு. இந்தியா எப்போதும் இலங்கையின் பிராந்தியந்துடன் இருக்கவே விரும்புகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல் மோதல்கள் நீடித்து வருகின்றன. அதற்கு ராணுவ தீர்வை விரும்பவில்லை. அது நாட்டின் அரசியல ், பொருளாதார சூழலுக்கு உகந்ததல் ல. சுயநலமிக்க தலைவரின் கீழ் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. இந்தியாவை மாதிரியாகக் கொண்டு இலங்கையில் 13-வது திருத்தத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளத ு ” என்று விக்ரமசிங்க கூறினார்.

இஸ்ரேலில் சுற்றுப்பயணம் செய்த முதல் ‌சி‌றில‌ங்க பிரதமர் விக்ரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்!.. வேகமெடுக்கும் தவெக தேர்தல் பணி...

6 அமைச்சர் பதவி வேண்டும்!.., திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா காங்கிரஸ்?...

காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. பரிதாபமாக பலியான 4 வயது சிறுமி..!

இந்த தொகுதியெல்லாம் எங்களுக்கு வேணும்!.. அதிமுகவுக்கு செக் வைக்கும் பாஜக!...

Show comments